×

பள்ளி ஆண்டு விழா

பெரியகுளம், ஏப். 30: பெரியகுளம் டிரயம்ப் நடுநிலைப்பள்ளியில் 80வது ஆண்டு விழா, பெற்றோர் தின விழா மற்றும் பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் வீராசாமி தலைமை வகித்தார். பள்ளிக்குழு உறுப்பினர் கணேஷ் முன்னிலை வகித்தார். ஆசிரியர் கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார். பள்ளி செயலர் மற்றும் தலைமை ஆசிரியர் ராம்சங்கர் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். பெரியகுளம் நகர்மன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர் சங்கரநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவியரை வாழ்த்தி பேசினர். பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில், மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும்பெற்றோர் கலந்து கொண்டனர். ஆசிரியை பத்மாவதி நன்றி கூறினார்.

The post பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Periyakulam Triumph ,Middle School ,Parents Day ,Giving Ceremony ,Dinakaran ,
× RELATED பெரியகுளம் குப்பை கிடங்கில் தீ 3...