×

மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை திருவிழா நாளை துவக்கம்

மானாமதுரை, ஏப்.30: மானாமதுரை வீரஅழகர்கோயில் சித்திரை திருவிழா நாளை காப்புகட்டுதலுடன் துவங்குகிறது. மதுரை கள்ளழகர் கோயிலை போன்று மானாமதுரையில் உள்ள வீரஅழகர் கோயில் சிறப்பு பெற்றது. திருமலை நாயக்கர் மன்னர் காலம் முதல் மதுரையை ேபான்று இங்கும் சித்திரை திருவிழா பத்துநாட்கள் சிறப்பாக நடைபெறும். சித்திரை மாத பவுர்ணமி அன்று மானாமதுரை வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்வினை லட்சக்கணக்கானோர் கண்டு தரிசிப்பது வழக்கம்.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இந்த கோயில் நாளை காப்புகட்டுதலுடன் சித்திரை திருவிழா துவங்குகிறது. பத்துநாட்கள் பல்வேறு மண்டகப்படி தாரர்களால் நடத்தப்படும் விழாவின் மே 4 ம் தேதி எதிர்சேவை நிகழ்ச்சியும், முக்கிய நிகழ்வான ஆற்றில் இறங்கும் விழா மே.5 ம் தேதி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன்,மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

The post மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை திருவிழா நாளை துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Manamadurai Veeranagar Temple Siritra Festival ,Manamadurai ,Manamadurai Weerakargoil Sitra Festival ,Madurai Kallasagar Temple ,Manamadurai Veeravaragar Temple Siritra Festival ,Dinakaran ,
× RELATED மானாமதுரை ரயில் நிலையத்தில் பூட்டியே கிடக்கும் பாத்ரூம்: திறக்க கோரிக்கை