×

நம்புதாளையில் மீனவர்கள் விழிப்புணர்வு கூட்டம்

தொண்டி, ஏப். 30: தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் கடலோர பாதுகாப்பு குழும காவல் படை சார்பில் கிராம மீனவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசுகையில், ‘‘தற்போது விடுமுறை காலம் என்பதால் கடற்கரைக்கு பொதுமக்கள் அதிகம் வரலாம். அவர்களை போட்டிங் அழைத்து செல்ல கூடாது. 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர்களை கடல் தொழிலுக்கு அழைத்து செல்ல கூடாது, மீறினால் கடுமையான தண்டனை வழங்கப்படும். கடல் பகுதியில் புதிய நபர்கள் தென்பட்டாலும், போதை பொருள்கள் கடத்துவதாக தெரிந்தாலும் உடனடியாக கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’’ என்றார். மேலும் இந்த கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் கனகராஜ், எஸ்ஐ பாலகிருஷ்ணன், பெருமாள், தலைமை காவலர் இளையராஜா உட்பட மீனவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post நம்புதாளையில் மீனவர்கள் விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Nambuthalai ,Dondi ,Coast Guard Group Police ,Nambudalai ,Thondi ,Dinakaran ,
× RELATED நம்புதாளை ஆற்றுப்பகுதியை தூர்வார மீனவர்கள் வலியுறுத்தல்