×

இளம்பெண் தற்கொலை

ஈரோடு, ஏப். 30: ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் பெயிண்டர் இப்ராகிம் (34). இவரது மனைவி ரகமத் நிஷா (31). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கிடையே கடந்த சில தினங்களாக குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், மனவேதனை அடைந்த ரகமத் நிஷா கடந்த 25ம் தேதி வீட்டில் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் ரகமத் நிஷாவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரகமத் நிஷா உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post இளம்பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Erode ,Painter Ibrahim ,Jeeva Nagar, Krishnampalayam, Erode ,Rahmat Nisha ,
× RELATED தோல் கழிவுகள் அகற்றம்: மாநகராட்சி எச்சரிக்கை