×

கிரிமியா எண்ணெய் கிடங்கை தாக்கிய உக்ரைன் டிரோன்

கீவ்: ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியா எண்ணெய் கிடங்கு மீது ஆளில்லா விமானம் தாக்கியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அதன் மீது கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்துள்ளது. இதில் உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல நகரங்கள் தரை மட்டமாகி விட்டன. அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதற்கிடையே அமெரிக்கா மற்றும் பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி செய்வதன் மூலம், ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் தொடர்ந்து போராடி வருகிறது.

தங்களிடமிருந்து ரஷ்யா கைப்பற்றிய கிரிமியா தீபகற்பத்தை மீட்போம் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியும் சூளுரைத்துள்ளார். இந்நிலையில், கிரிமியாவிலுள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீது நேற்று ஆளில்லா விமானங்கள் மூலம் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அந்த பகுதி முழுவதும் தீ விபத்து ஏற்பட்டது. எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீயால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலம் சூழ்ந்தது. இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

The post கிரிமியா எண்ணெய் கிடங்கை தாக்கிய உக்ரைன் டிரோன் appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Crimea ,Kiev ,Russia ,NATO Federation ,Dinakaran ,
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...