×

மோடியின் 100வது மன் கி பாத் உரை ஐநாவில் இன்று நேரடி ஒளிபரப்பு

நியூயார்க்: பிரதமர் மோடியின் வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் 100வது நிகழ்ச்சி ஐநாவில் இன்று நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. வானொலியில் ஒலிபரப்பாகும் பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சி கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் 11.30 மணி வரை, ‘மன் கி பாத்’ என்ற தலைப்பில், வானொலியில் இந்தியில் மக்களிடையே உரையாற்றி வருகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் மாதாந்திர மன் கி பாத்தின் 100வது பகுதி, ஐநா சபையின் தலைமையகத்தில் இன்று நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘ஐநா தலைமையகத்தில் உள்ள அறங்காவலர் கவுன்சில் சேம்பரில் நேரலை செய்யப்பட உள்ளதால், ஒரு வரலாற்று தருணத்திற்கு தயாராகுங்கள்’ என ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதுக்குழு டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.

பெண்ணுக்கு பிரசவம்: மன் கி பாத்தின் 100வது நிகழ்ச்சியை கொண்டாடும் வகையில் டெல்லியில் மாநாடு நடைபெற்றது. இதில் உபியை சேர்ந்த பூனம் தேவி கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர். மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட 100 பேரில் பூனம் தேவியும் ஒருவர். பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையின் போது பூனம் தேவி சமுதாயத்திற்கு ஆற்றிய பணி குறித்து பேசியுள்ளார்.

The post மோடியின் 100வது மன் கி பாத் உரை ஐநாவில் இன்று நேரடி ஒளிபரப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,UN ,New York ,PM ,
× RELATED அனைத்திலும் சந்தேகத்துக்குரிய...