×

‘அரிசி கொம்பன்’ மூணாறில் சிக்கியது

மூணாறு: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே சின்னக்கானல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அரிசிக்கொம்பன் காட்டுயானையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. நேற்று முன்தினம் வனத்துறை சிறப்பு குழுவினர், யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிட்டனர். இம்முயற்சி தோல்வியை தழுவியது. நேற்று சின்னக்கானலில் உள்ள பேஸ்கேம்ப் என்ற இடத்தில், யானை முகாமிட்டிருந்த சிங்குகாண்டம் வனப்பகுதிக்கு சென்றனர். அங்கு அரிசி கொம்பனுடன் சக்கை கொம்பன் யானையும் நின்றதால், பட்டாசு வெடித்து அரிசி கொம்பனை திசை திருப்பி சிமென்ட் பாலம் அருகே கொண்டு வந்தனர். அங்கு வந்த யானை மீது முதல் மயக்க ஊசியை செலுத்தினர். ஆனால் யானை மயக்கமடையவில்லை. இதனால் பல மணி நேரம் காத்திருந்த வனத்துறையினர், மேலும் 4 முறை மயக்க ஊசி தாக்குதல் நடத்தினர்.

அதன்பின் அரிசி கொம்பன் யானை சுயநினைவின்றி இருப்பதை உறுதி செய்து, 4 கும்கி யானைகள் உதவி மூலம் அதன் கால்களை கட்டி, கண்களை கருப்பு துணியால் மூடினர். அதனை தொடர்ந்து இயந்திரங்களின் உதவியுடன் மாலை 5 மணி அளவில் யானையை கொண்டு செல்வதற்காக வனத்துறையினர் ஏற்பாடு செய்த லாரியில் அரிசி கொம்பன் யானையை ஏற்றினர். ‘ஆபரேஷன் அரிசி கொம்பன்’ யானையை பிடிக்கும் பணியை வனத்துறையினர் வெற்றிகரமாக முடித்தனர். இதனால், அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். யானையை லாரியில் ஏற்றி கொண்டு செல்வதை காண கொட்டு மழையையும் பொருட்படுத்தமல் ஏராளமான மக்கள் கூடினர். யானையை தேக்கடி பெரியாறு வன விலங்கு சரணாலயத்தில் கொண்டு விட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ‘அரிசி கொம்பன்’ மூணாறில் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Moonaru ,Aricicomban ,Wildhayana ,Kerala State ,Ikkki District ,Chinnakanal ,Moon ,
× RELATED மூணாறு நகரில் உயர்கோபுர...