×

செங்கோட்டையில் பரபரப்பு; நல்ல பாம்பை மாலையாக அணிந்து டீ குடிக்க வந்தவர்

செங்கோட்டை: பாம்பு என்றாலே படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த முதியவர் ஒருவர் பாம்பை லாவகமாக தோளில் மாலையாக போட்டு கொண்டு சாவகாசமாக டீக்கடைக்கு வந்தது பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், அதே நேரத்தில் பீதியையும் ஏற்படுத்தியது. செங்கோட்டை பிரானூர் பார்டரில் முதியவர் ஒருவர் கழுத்தில் நல்ல பாம்பை மாலையாக போட்டுக்கொண்டு டீ குடிக்க வந்துள்ளார். இதனைக் கண்டு அங்கு டீ குடிக்க வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இது தொடர்பான வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த நபர் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர் செங்கோட்டையைச் சேர்ந்த ஜப்பார் (70) என்பதும், டெய்லர் கடை வைத்திருப்பதும் தெரியவந்தது. அவர் பொழுது போக்காக பாம்புகளை பிடிக்கத் துவங்கியுள்ளார். பின்னர் அதுவே பழக்கமாகி விட்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post செங்கோட்டையில் பரபரப்பு; நல்ல பாம்பை மாலையாக அணிந்து டீ குடிக்க வந்தவர் appeared first on Dinakaran.

Tags : SENKOT ,Srakkotta ,South Kasi district ,
× RELATED தென் மாவட்டங்களில் தொடர் மழை: நெல்லை,...