×

உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் குறைகளை தீர்க்க புதிய அமைப்பு: யு.ஜி.சி. திட்டம்

சென்னை: உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கும் மாணவ, மாணவிகள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ‘பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) விதிமுறைகள் (ரெகுலேசன்ஸ்) 2023’ கொண்டு வந்து இருக்கிறது. அந்த விதிமுறைகளில் கூறியுள்ளபடி உயர்கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்யும் வகையில், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ்குமார் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: மாணவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளை பின்பற்ற முயற்சிக்க வேண்டும்.

அதன்படி, ‘பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகள் 2023’ மாணவர்களின் குறைகளை தீர்க்கும் வழிமுறைகளை வலுப்படுத்த உங்கள் நிறுவனத்துக்கு உதவும். அதற்கேற்றாற்போல், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய குழு அமைக்கப்பட வேண்டும். அந்த குழுவில் மாணவர்களின் குறைகளை கேட்கும் வகையில், கல்வி நிறுவனங்களை சாராத ஒரு அதிகாரியை நியமித்து, குழுவை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் குறைகளை தீர்க்க புதிய அமைப்பு: யு.ஜி.சி. திட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...