×

அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற இமாச்சல் முதல்வரின் தாயிடம் தகராறு: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு

ஹமீர்பூர்: இமாச்சலப் பிரதேச மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவின் தாயார் சன்சரோ தேவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை அவரது குடும்ப உறுப்பினர்கள் நாதவுன் ெபாது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவின் தாய் என்பது அங்கிருந்த மருத்துவர்களுக்கு தெரியவில்லை. அப்போது பணியில் இருந்த மருத்துவர், முதல்வரின் தாய் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் முகக்கவசம் அணியுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் அவர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் பூதாகரமாக மாறியதால், மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹமீர்பூர் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்.கே.அக்னிஹோத்ரி கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளுது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாத வகையில் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். முதல்வரின் குடும்பத்தினரிடம், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியதால் பிரச்னைகள் ஏற்பட்டதாக தெரிகிறது’ என்றார்.

The post அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற இமாச்சல் முதல்வரின் தாயிடம் தகராறு: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief of ,Imachal ,Government Hospital ,Hamirpur ,Sansaro Devi ,Himachal Pradesh ,Chief Minister ,Shukwinder Singh Sughu ,Himachal ,Hospital ,
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...