×

முகத்துவார மணல் திட்டுக்களை தூர்வாரக் கோரி 500 நாட்டு படகு மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்..!!

அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினத்தில் கடற்கரை முகத்துவாரத்தை அடைத்து நிற்கும் மணல் திட்டுகளை தூர்வாரக் கூறி 500 க்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே ராஜமனு ஊராட்சிக்குட்பட்ட கீழத்தோட்டம் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 250க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளை கொண்டு மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் முகத்துவாரம் அடைத்து நிற்கும் மணல் திட்டுகளை தூர்வாரும் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் முடிவு பெறும் நிலையில் உள்ளது. ஆனால் முகத்துவாரங்களை தூர்வாரும் பணி சரிவர செய்யப்படாததால் நாட்டு படகுகள் கடலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் கடற்கரையிலேயே நாட்டு படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில் உடனடியாக முகத்துவாரத்தை ஆழப்படுத்தி தூர்வாரி நடுபடகுகள் கடலுக்குள் சென்று வர வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்துடன் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீன்வளத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

The post முகத்துவார மணல் திட்டுக்களை தூர்வாரக் கோரி 500 நாட்டு படகு மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Aprambattinam ,Atharambattinam ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...