×

குஜராத்தை வீழ்த்துமா கொல்கத்தா?.. டெல்லியை வீழ்த்தி வெற்றிப்பாதைக்கு திரும்ப ஐதராபாத் முனைப்பு

கொல்கத்தா: 16வது ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் கொல்கத்தா – குஜராத் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த இரு அணிகள் கடந்த முறை மோதியபோது, உலகமே திரும்பி பார்க்கும் வகையில் கொல்கத்தா அணியின் ரிங்கு சிங் கடைசி ஓவரில் 5 சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற செய்தார். கொல்கத்தாவை பொறுத்தவரை ஜேசன் ராய், நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் ஆகியோர் அபாரமான ஃபார்மில் இருக்கிறார்கள். ரஸ்சலும் பார்முக்கு திரும்பினால் கேகேஆர் அச்சுறுத்தலான அணியாக இருக்கும். அதேபோல் காயத்தில் இருந்து ஷர்துல் தாகூர் மீண்டுள்ளதால், உமேஷ் யாதவிற்கு பதிலாக களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது. பவுலிங்கை பொறுத்தவரை வருண் சக்கரவர்த்தி, சுயஷ் சர்மா மற்றும் சுனில் நரைன் ஆகியோரின் சுழலில்தான் கொல்கத்தாவின் பலம் உள்ளது.

மறுபக்கம் குஜராத் அணி பேட்டிங்கில் மூன்றாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா களமிறங்க தொடங்கியுள்ளதால், 200 ரன்களை இலக்காக நிர்ணயித்தாலும் அசராமல் சேஸ் செய்யும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. முகமது ஷமி பந்துவீச்சில் ரன்கள் அடிக்க முடியாததால், ரஷித் கான் ஓவரில் ரன்கள் சேர்க்க முயன்று அணிகள் விக்கெட் கொடுத்து வருகிறார்கள். கேகேஆர் அணி இதற்கு என்ன மாற்று திட்டத்தை வைத்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஈடன் கார்டன் மைதானத்தை பொறுத்தவரை 3 போட்டிகளில் 4 முறை 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய ஆட்டமும் ஹை ஸ்கோரிங் த்ரில்லராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல் ஆட்டத்தில் சுழலுக்கு சாதகம் இருக்கும் என்பதால், இரு அணிகளின் சுழற்பந்துவீச்சாளர்களின் செயல்பாடுகளே வெற்றியை தீர்மானிக்கும். அதேபோல் ரிங்கு சிங் மீண்டும் ஒரு மாயாஜாலம் நிகழ்த்துவாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு டெல்லி-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. 2 அணிகளும் 2 வெற்றி, 5 தோல்வியுடன் இன்று களம் காண்கின்றன. கடந்த போட்டியில் டெல்லியுடன் தோல்வியடைந்த ஐதராபாத் இன்று அதற்கு பழிதீர்க்க காத்திருக்கிறது. டெல்லியும் 3வது வெற்றிக்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப ஐதராபாத் அணி வீரர்கள் இன்று ஆவேசமாக ஆடினால் டெல்லியை பஞ்சராக்கலாம். அதே நேரத்தில் டெல்லியும் புள்ளி பட்டியலில் உயர்வதற்கான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். எனவே டெல்லியில் நடைபெறும் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post குஜராத்தை வீழ்த்துமா கொல்கத்தா?.. டெல்லியை வீழ்த்தி வெற்றிப்பாதைக்கு திரும்ப ஐதராபாத் முனைப்பு appeared first on Dinakaran.

Tags : Kolkata ,Gujarat ,Hyderabad ,Delhi ,Kolkata- ,39th ,16th IPL series ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி: கொல்கத்தா...