×

போதிய விளைச்சல் இருந்தும் உரிய விலை கிடைக்கவில்லை-தட்டைப்பயிர் விவசாயிகள் கவலை

காரமடை : மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தட்டைப்பயிர் விவசாயம் பரவலாக செய்யப்பட்டு வருகிறது.60 நாட்களில் மகசூல் கிடைக்கும் என்பதால் விவசாயிகளும் அதனை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.பயிரிட துவங்கியதில் இருந்து 60 நாட்களில் பறிக்கத் துவங்கலாம். ஒரு மாதங்களுக்கு இரு நாட்களுக்கு ஒரு முறை தட்டைப்பயிர் அறுவடை செய்யலாம் என்பதால் விவசாயிகள் அதனை பயிரிடுவதில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றனர்.குறிப்பாக சிறுமுகை அடுத்துள்ள லிங்காபுரம்,வச்சினம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தட்டைப்பயிர் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

போதிய விளைச்சல் இருந்தும், உரிய விலை கிடைக்கவில்லை என தட்டைக்காய் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து லிங்காபுரம் பகுதியைச்சேர்ந்த விவசாயி சந்திரசேகர் கூறுகையில்: தட்டைப்பயிர் புரதச்சத்து நிறைந்த பயிராகும். 60 நாட்களில் அறுவடை செய்யலாம் என்பதால் தட்டைப்பயிர் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. குறைந்தது இரு நாட்களுக்கு ஒரு முறை என ஒரு மாதங்களுக்கு தட்டைப்பயிர் அறுவடை செய்யலாம் எனவும் தெரிவித்தார்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனையாகி வந்த நிலையில் தற்போது விலை சரிந்து ரூ.8க்கு விற்பனையாகி வருவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கவலையுடன் தெரிவித்தார்.

The post போதிய விளைச்சல் இருந்தும் உரிய விலை கிடைக்கவில்லை-தட்டைப்பயிர் விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Madtupalayam ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...