×

பைஜூஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

பெங்களூரு: பைஜூஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் உள்ள பைஜூஸ் நிறுவன சி.இ.ஓ ரவீந்திரனின் வீடு, அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. அந்நிய செலாவணி விதிமீறல் தொடர்பான புகாரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

2011-23 வரையிலான காலகட்டத்தில் பைஜூஸ் நிறுவனம் ரூ.28,000கோடி அந்நிய நேரடி முதலீடு பெற்றதில் விதிமீறல். 2020-21 ம் ஆண்டுக்கான நிதி விவரங்கள், கணக்குகளை பைஜூஸ் நிறுவனம் சமர்ப்பிக்கவில்லை என்றும் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பைஜூஸ் நிறுவனம் வழங்கிய விவரங்களை கொண்டு உண்மைத் தன்மை ஆராயப்பட்டு வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தனி நபர்கள் அளித்த பல்வேறு புகார்களின் அடிப்படையில் பைஜூஸ் நிறுவனம் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புகார் தொடர்பாக பைஜூஸ்சி.இ.ஓ ரவீந்திரனுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. சோதனையில் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்கள்,டிஜிட்டல் தரவுகள் கைப்பற்றப் பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post பைஜூஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Tags : Byjuice ,BENGALURU ,Enforcement Directorate ,CEO ,Ravindra ,Dinakaran ,
× RELATED பைஜூஸ் அதிபர் சொத்து மதிப்பு பூஜ்யமாக சரிவு: ஃபோர்ப்ஸ் அறிக்கை வெளியீடு