×

தேனி மாவட்டம் அணைக்கரைப்பட்டி கிராமத்தில் நில மோசடி புகாரில் ஊராட்சி மன்றத் தலைவர் கைது..!!

தேனி: தேனி மாவட்டம் அணைக்கரைப்பட்டி கிராமத்தில் நில மோசடி புகாரில் ஊராட்சி மன்றத் தலைவர் லோகநாதன் கைது செய்யப்பட்டார். இறந்தவர்கள் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட புகாரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜெயபிரகாஷ் என்பவரின் குடும்பத்துக்குச் சொந்தமான 2.54 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்ததாக புகார் எழுந்தது. ஜெயப்பிரகாஷின் தாத்தா, தந்தை உயிருடன் இருப்பதாக அரசு மருத்துவரிடம் வாழ்நாள் சான்றிதழ் பெற்றுள்ளனர். வாழ்நாள் சான்றிதழின் அடிப்படையில் பத்திர எழுத்தர் முருகன் மூலம் கிரயப் பத்திரம் எழுதியுள்ளனர்.

2022ல் அந்தோணி டொமினிக் கிரயம் செய்து தந்ததாக சார் பதிவாளர் கார்த்திகேயன் பத்திரப்பதிவு செய்துள்ளார். அரசு மருத்துவர், காவல் ஆய்வாளர், சார்-பதிவாளர் உள்ளிட்டோரின் கூட்டமாக சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது. 2.54 ஏக்கர் நில மோசடி புகாரில் போடி தாலுகா ஆய்வாளர், சார்-பதிவாளர், பத்திர எழுத்தர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post தேனி மாவட்டம் அணைக்கரைப்பட்டி கிராமத்தில் நில மோசடி புகாரில் ஊராட்சி மன்றத் தலைவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : President ,Naval Council ,Theni District Dumakaraipatti ,Theni ,Currency Council ,Loganathan ,Theni District ,Council ,Theni District Dachakaraipatti Village ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன...