×

கணவர், மகனுக்கு போதைப்பழக்கம் ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் ஆட்டோ டிரைவர் தர்ணா

 

ஈரோடு: போதைப்பொருளுக்கு கணவர், மகன் ஆளானதையொட்டி போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஆட்டோ ஓட்டுனர் தர்ணாவில் ஈடுபட்டனார். ஈரோடு, ஓடைப்பள்ளத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (45), இவரது மனைவி கீதா (39). இவர்களது மகன் யோகேஸ்வரன் (19). தம்பதி இருவரும் ஆட்டோ டிரைவர்கள். யோகேஸ்வரன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். போதைப் பழக்கத்திற்கு ஆளான சந்திரசேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். யோகேஸ்வரனும் போதைப்பழக்கத்திற்கு ஆளானதால் திடீரென மாயமானார்.

இது குறித்து கீதா போலீசில் புகார் செய்தார். ஓரிரு நாளில் யோகேஸ்வரன் வீடு திரும்பினார். கணவர் மற்றும் மகன் போதைப்பழக்த்திற்கு ஆளானதால் ஆத்திரமடைந்த கீதா அதனை விற்பனை செய்பவர்கள் குறித்து ஈரோடு டவுன் போலீசில் புகார் செய்தார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கீதா குறை கூறி வந்தார். இந்நிலையில் நேற்று காலை ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கீதா பெருந்துறை ரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்ததும் ஈரோடு தெற்கு போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து கீதாவுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.அப்போது, புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி, தெற்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

The post கணவர், மகனுக்கு போதைப்பழக்கம் ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் ஆட்டோ டிரைவர் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Drug Erode Collector's Office ,Erode ,Drug Erod ,Tarna ,Dinakaran ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...