×

வெளிப்பாளையத்தில் ஒயர், மின்கலன்கள் பழுதுபார்க்கும் பணியில் மின்சார ஊழியர்கள்

 

நாகப்பட்டினம்,ஏப்.29: தினகரன் செய்தி எதிரொலியால் நாகப்பட்டினம் வெளிப்பாளையம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட மின்கம்பங்கள் சரி செய்யும் பணியை மின்வாரிய பணியாளர்கள் மேற்கொண்டனர். நாகப்பட்டினம் வெளிப்பாளையம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான ராமநாயக்கன் குளத்தெரு, காடம்பாடி, காளியம்மன்கோயில் தெரு, மேட்டுபங்களா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக திடீரென மின்சாரம் தடைப்பட்டு திடீரென மின்சாரம் வருவதால் வீட்டில் உள்ள மின்சாத பொருட்கள் சேதம் அடைந்தது என நேற்று(28ம் தேதி) செய்தி தினகரனில் வெளிவந்தது. இதையடுத்து வெளிப்பாளையம் துணைமின் நிலைய உதவி செயற்பொறியாளர் உத்தரவின் பேரில், மழையின் காரணமாக சேதம் அடைந்த ஒயர்கள், மின்கலன்கள் உள்ளிட்டவற்றை பழுது நீக்கம் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

The post வெளிப்பாளையத்தில் ஒயர், மின்கலன்கள் பழுதுபார்க்கும் பணியில் மின்சார ஊழியர்கள் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Dinakaran ,Nagapattinam Uppalayam ,
× RELATED நாகப்பட்டினம் நகராட்சி குப்ைப...