×

இறைச்சி கழிவு கொட்டிய வேன் சிறை பிடிப்பு

 

பல்லடம்: பல்லடம் அருகேயுள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி எலந்தை குட்டை பகுதியில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டிய வேனை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி தலைவர் ரோசாமணி ஈஸ்வரன், ஊராட்சி பகுதியில் பொது இடங்களில் கோழி இறைச்சி கழிவு உள்ளிட்ட எந்த கழிவு, குப்பைகளையும் கொட்டக்கூடாது என்று எச்சரித்தார். இனி மேல் கழிவு மற்றும் குப்பைகளை கொட்ட மாட்டோம். அரசின் விதிமுறைப்படி அதனை பாதுகாப்பான முறையில் அழித்து விடுகிறோம் என்று வேன்காரர் உறுதி அளித்ததின் பேரில் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்து வேனை விடுவித்தனர்.

The post இறைச்சி கழிவு கொட்டிய வேன் சிறை பிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Vane ,Palladam ,Dinakaran ,
× RELATED புகையிலை பொருட்கள் பறிமுதல்