×

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண் உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் அருகே வி.ராமலிங்காபுரத்தில் தனியார் பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் ெதாழிலாளர்கள் வேலை செய்தபோது ஒரு அறையில் மின்னல் தாக்கியதாகவும் இதில் புஷ்பம் என்ற பெண் கருகி உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், மழை காரணமாக பட்டாசுகளை விரைவாக ஒதுக்கி வைக்கும்படி தொழிலாளர்களை ஆலை நிர்வாகத்தினர் வற்புறுத்தி உள்ளனர். அப்போது ஆலையின் 13வது அறையில் திடீரென பட்டாசுகளில் உராய்வு ஏற்பட்டு அறை முழுவதும் தீப்பிடித்துள்ளது. இதில் அறையில் இருந்து வெளியே வரமுடியாமல் புஷ்பம் தீயில் கருகி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து பட்டாசு ஆலை மேலாளர் கண்ணன், போர்மேன் பழனிவேல் ஆகியோரை தேடி வருகின்றனர்.

The post பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : plant ,Virudunagar ,Ramalingapuram ,Dinakaran ,
× RELATED நெல்லிக்குப்பம் ஆலை ரோடு பகுதியில் ...