×

பெண்கள் அதிகளவில் வந்தால் அரசியல் தூய்மை அடையும்: தெலங்கானா கவர்னர் தமிழிசை கருத்து

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சென்றான்பள்ளி கிராமத்தில் உள்ள கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தெலுங்கானா, புதுச்சேரி யூனியன் பிரதேச ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது அவர் பேசும்போது, ‘‘பெண்கள் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும். பெண்கள் அரசியலுக்கு வருவதன் மூலம் அரசியல் தூய்மை அடையும். பெண்கள் அரசியலை தனக்கான துறை இல்லை என்று ஒதுக்கக் கூடாது. பெண்கள் அதிக அளவில் சவால்களை சந்திக்க மன தைரியமும் தன்னம்பிக்கையும் தேவை. ஆண்களை விட பெண்கள் தற்போதும் அதிக அளவில் சவால்களை சந்தித்து வருகிறார்கள்’’ என்றார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘தமிழக ஆளுநர் குறித்து கருத்து கூற விரும்பவில்லை. அந்தந்த ஆளுநர்கள் மசோதாக்களில் கையெழுத்து போடுவதில் அவர்கள் சட்டத்தை எப்படி கையாளுகின்றனர் என்பதை பொறுத்து காலதாமதமாகிறது’ என்றார்.

The post பெண்கள் அதிகளவில் வந்தால் அரசியல் தூய்மை அடையும்: தெலங்கானா கவர்னர் தமிழிசை கருத்து appeared first on Dinakaran.

Tags : Telangana ,Chendanpalli village ,Vellore District ,Telangana Governor ,TN ,
× RELATED தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து..!!