×

2023-24ம் ஆண்டுக்கான செந்தர விலை பட்டியல் அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், 2023-2024ம் ஆண்டுக்கான பல்வேறு துறைகளில் கட்டப்படும் கட்டடங்களின் மதிப்பீடு தயார் செய்வதற்குரிய, கட்டுமானப் பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் தினக்கூலி விவரம் அடங்கிய செந்தர விலை விவர பட்டியலை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் நிதித்துறை அரசு துணை செயலாளர் பிரதீக் தயாள், பொதுப்பணித்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் விஸ்வநாத், பொதுப்பணித்துறை சென்னை மண்டலத் தலைமை பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகரன், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் சாந்தி, நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளர் சந்திரசேகர், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம்-2 தலைமை பொறியாளர் குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post 2023-24ம் ஆண்டுக்கான செந்தர விலை பட்டியல் அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார் appeared first on Dinakaran.

Tags : Minister A. Etb. Velu ,Chennai ,Chennai Leadership Secretariat ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...