×

வீடியோ கேம் விளையாடுவதை கண்டித்ததால் பாஜ பிரமுகரின் மகன் தூக்கிட்டு தற்கொலை

ஆவடி: செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதை கண்டித்ததால் பாஜ பிரமுகரின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவடி விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவர் பாஜ ஊடக பிரிவில் உள்ளார். இவரது மகன் தினேஷ்குமார்(19). பூந்தமல்லி தனியார் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரது மகன் தினேஷ்குமார் கல்லூரிக்கு செல்லாமல் ஒரு வார காலமாக வீட்டிலேயே, செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்த குருமூர்த்தி, தன் மகனை இரு தினங்களாக கண்டித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் படுக்கை அறைக்கு சோகத்துடன் சென்ற தினேஷ்குமார் மறுநாள் காலை விடிந்த பிறகும் அறையை விட்டு வெளியே வரவில்லை. தினேஷ்குமாரின் அறைக்கு சென்று குருமூர்த்தியின் குடும்பத்தினர் பார்த்தனர். அங்கு, மின்விசிறியில் தினேஷ்குமார் தூக்கிட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்த ஆவடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீடியோ கேம் விளையாடுவதை கண்டித்ததால் பாஜ பிரமுகரின் மகன் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Baja Prakhrukar ,Awadi ,Baja Praksha ,Awadi Vivekananda ,Baja Mukha ,
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!