×

சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருத்தணி தளபதி கே.விநாயகம் மகளிர் கல்லூரி ஆண்டு விழா: பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

திருத்தணி: சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருத்தணி தளபதி கே.விநாயகம் மகளிர் கல்லூரியின், 4ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.
திருத்தணி அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தளபதி கே.விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 4ம் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. கல்லூரியின் தாளாளர் டாக்டர் எஸ்.பாலாஜி தலைமை தாங்க, கல்லூரி முதல்வர் முனைவர் இரா. வேதநாயகி வரவேற்றார். இந்த விழாவில் திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ், சின்னத்திரை நடிகை, கின்னஸ் சாதனையாளர் ஐஸ்வர்யா ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். இதற்கு முன்னதாக பேராசிரியர் கு.செ.சரஸ்வதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இதில், சிறந்த சாதனை மாணவிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த கல்லூயிரின் முதல்வர் முதல்வர் வேதநாயகி பேசுகையில், இந்த கல்லூரியில் கல்வி மட்டும் போதிப்பதில்லை ஒழுக்கம், கலை பண்பாடு, நாகரீகம் சொல்லித்தரப்படுகின்றது. சிறந்த பேராசியர்கள் மூலம் வகுப்புகள் நடத்தி மாணவிகளை நேர்த்தியானவர்களாக உருவாக்கும் கடமையை இந்த கல்லூரி செய்து வருகிறது என்றார். திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் உமாசங்கர் மற்றும் பேராசியர்கள், கல்வி குழுமத்தின் இயக்குநர்கள், மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்துக்கொண்டனர். இறுதியில் பேராசிரியர் மீனா நன்றி கூறினார்.

The post சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருத்தணி தளபதி கே.விநாயகம் மகளிர் கல்லூரி ஆண்டு விழா: பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன appeared first on Dinakaran.

Tags : Thiruthani Commander K.K. ,Chennai ,Tirapati National ,Anniversary ,Women ,College ,of ,Nadayake ,Tiruthani ,Commander ,K.K. ,Vinayagam Women's College ,Chennai Tiruthani Commander K. Anniversary Festival of Women's College ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...