×

சீனாவிடம் இந்தியா கண்டிப்பு எல்லையில் அமைதி நிலவினால் ட்டுமே இருதரப்பு உறவு சீராகும்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

புதுடெல்லி: “எல்லையில் அமைதி நிலவினால் மட்டுமே இருதரப்பு உறவு சீராகும்,” என்று சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்பூவிடம் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்தார். ங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்பூ டெல்லியில் நேற்று முன்தினம் சந்தித்து பேசினர். அப்போது இந்தியா – சீனா எல்லை விவகாரம், இருதரப்பு நல்லுறவுக்கான மேம்பாடு குறித்து வெளிப்படையாக விவாதிக்கப்பட்டது. மேலும், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை குறித்து சீனா பேச முற்பட்டது.

அப்போது குறுக்கிட்டு பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “எல்லை தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்கள் மீறப்பட்டதே தற்போதைய எல்லை பிரச்னைக்கு காரணம். இதனால் இருதரப்பு நல்லுறவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் நிலைப்பாட்டின் அடிப்படையில் எல்லை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். லடாக் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் இருந்து படைகளை விலக்கி கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். எல்லையில் அமைதி நிலவினால் மட்டுமே இருதரப்பு உறவு சீராகும்,” என்று உறுதியாக தெரிவித்தார். லும் அவர், “எந்தவித தீவிரவாதமாக இருந்தாலும் அதனை அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து வேரோடு அழிப்பது அவசியம். தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளையே அதற்கு பொறுப்பேற்க செய்ய வேண்டும். தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடு உலக நாடுகளுக்கு மட்டுமல்லாமல் அதற்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை மிகவும் வலுவான அமைப்பாக மாற வேண்டும் என்றால், முதலில் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். பிராந்திய ஒத்துழைப்புக்கான வலுவான கட்டமைப்பை இந்தியா உருவாக்கி உள்ளது. உறுப்பினர் நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மற்ற உறுப்பு நாடுகள் நியாயமான நலன்களின் அடிப்படையில் மதிக்க வேண்டும்,” என்று கூறினார். ல்லையில் அமைதி: சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்பூ கூறுகையில், “தற்போது இந்தியா-சீனா எல்லையில் பொதுவாக அமைதி நிலவுகிறது. இரு தரப்பிலும் ராணுவம் மற்றும் தூதரக அளவிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இருதரப்பு உறவுகளுக்கு இடையேயான பரஸ்பர நம்பிக்கையை தொடர்ந்து மேம்படுத்தவும், இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு சரியான பங்களிப்பை வழங்கவும் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்,” என்று நம்புவதாக தெரிவித்தார்.

* கைகுலுக்குவதை தவிர்த்த ராஜ்நாத்

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற மற்ற நாட்டு பாதுகாப்பு அமைச்சர்களை கைகுலுக்கி வரவேற்ற ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு அமைச்சருடன் கைகுலுக்குவதை தவிர்த்துவிட்டார்.

The post சீனாவிடம் இந்தியா கண்டிப்பு எல்லையில் அமைதி நிலவினால் ட்டுமே இருதரப்பு உறவு சீராகும்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : India ,China ,Tumay ,Defence Minister ,Rajnath Singh ,New Delhi ,Defense Minister ,Lee ,Shangpu ,Dinakaran ,
× RELATED இந்தியா வருவதை தவிர்த்த எலான் மஸ்க் திடீர் சீன பயணம்