×

4 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் ஏசி மெக்கானிக் போக்சோவில் கைது

கூடுவாஞ்சேரி: பெருங்களத்தூரில் 4 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஏசி மெக்கானிக் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் லால் பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் திவாகர்(24). ஏசி மெக்கானிக். திருமணம் ஆகாதவர். இவர் அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியை விரட்டி பாலிய பலாத்காரம் செய்துள்ளார். இதனை அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறியுள்ளார்.

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தனர். அதன் அடிப்படையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்கு பதிவு செய்து திவாகரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், அவர் செய்த தவறை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து திவாகரை போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

The post 4 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் ஏசி மெக்கானிக் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Pocso ,Gootuvancheri ,Perangalthur ,Boxo ,Chennai ,AC ,
× RELATED போக்சோ, போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு