×

க்ரோமாவின் அனைத்தும் ஆப்பிள் பிரசாரம் அறிமுகம்

சென்னை: க்ரோமா தனது வாடிக்கையாளர்களுக்காக ‘எவ்ரிதிங் ஆப்பிள்’ என்னும் பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆப்பிளின் சமீபத்திய தயாரிப்புகளான ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 மாடல்களை மாதாந்திர தவணை மூலம் வாங்க இது உதவுகிறது. 24 மாதங்கள்* கால அளவிலான இந்த மாதாந்திர தவணை முறையில் இதுவரையில்லாத குறைந்த விலையில் ஐபோன் 13 மாடலை 1,708* ரூபாய்க்கும், ஐபோன் 14 மாடலை 2,125* ரூபாய்க்கும் வாங்க முடியும். அதாவது, ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 மாடல்களை முறையே 38,990* மற்றும் 46,990* ரூபாய்க்கு 24 மாதம் வரையிலான மாதாந்திர தவணையில் எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் வாங்கலாம்.

இந்த 2 மாடல் ஐபோன்களும் ஆச்சர்யமூட்டும் பல நவீன அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், வாடிக்கையாளர்கள் வெறும் 25,900* ரூபாயில் இருந்து ஆரம்பமாகும் பல்வேறு ஆப்பிள் வாட்ச்களில் தங்களுக்கு பிடித்தமானதை தேர்வு செய்யலாம். 11,499* ரூபாய் விலையில் தொடங்கும் ஆப்பிள் ஏர்பாட்ஸ், 54,990* ரூபாய் முதல் மேக்புக் க்ரோமாவில் கிடைக்கிறது. ஐபேட் வாங்க விரும்பினால் தள்ளுபடி விலையாக 26,900* [ஹெச்.டி.எப்.சி வழங்கும் கேஷ்பேக் உள்பட] ரூபாய்க்கு, மாதாந்திர தவணையாக 1,208* ரூபாய் செலுத்தி பெறலாம். இந்த சலுகை மே 2ம் தேதி வரை கிடைக்கும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post க்ரோமாவின் அனைத்தும் ஆப்பிள் பிரசாரம் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Chroma ,Chennai ,Kroma ,Apple ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?