×

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் செங்கல்பட்டு டிஎஸ்பிக்கு பிடிவாரன்ட்

சென்னை: செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில், குற்ற பதிவேடு டிஎஸ்பியாக பணியாற்றி வருபவர் முருகேசன். இவர், கடந்த சில வருடங்களுக்கு முன், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், வாழவந்திநாடு ஆகிய காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அப்போது சாலை விபத்து, மண் கடத்தல் உள்ளிட்ட 5 வழக்குகளில், விசாரணை அதிகாரியாக இருந்து வந்தார். இந்த வழக்குகள், தற்போது சேந்தமங்கலம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

வழக்கு விசாரணையில் ஆஜராகி சாட்சியம் அளிக்க, பலமுறை சம்மன் அனுப்பியும், டிஎஸ்பி முருகேசன் ஆஜராகவில்லை. இந்நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு டிஎஸ்பி முருகேசன் ஆஜராகாததால், நீதிபதி ஹரிஹரன் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

The post வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் செங்கல்பட்டு டிஎஸ்பிக்கு பிடிவாரன்ட் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,DSP ,Chennai ,Murugesan ,Crime Register ,Chengalpatu District Police Surveillance Office ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை