×

அச்சிறுப்பாக்கம் அருகே தரமற்ற கிராம சாலையை சீரமைக்க வேண்டும்: கிராம மக்கள் வலியுறுத்தல்

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே சாலையை சீரமைத்துத்தர அப்பகுதி மக்கள் கோரிக்கைவைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 2021 2022 நிதியாண்டில் நேமம் அத்திவாக்கம் கிராமம் மற்றும் கேசவராயன்பேட்டை கிராமம் வரையிலான சுமார் ஒரு கிலோ மீட்டர் இணைப்பு தார்ச்சாலை மேம்பாட்டு பணிகள் ரூ. 63 லட்சம் மதிப்பில் சில மாதத்திற்கு முன்பு போடப்பட்டது.

ஆனால் தற்போது சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மாறிவிட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். தரமற்ற சாலையால் அவ்வப்போது விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தார்ச்சாலையை சீரமைக்கும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

The post அச்சிறுப்பாக்கம் அருகே தரமற்ற கிராம சாலையை சீரமைக்க வேண்டும்: கிராம மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Printapakam ,Madurandakam ,Printaipakam ,Chengalpadu District Printing Union Rural Development ,
× RELATED இனப்பெருக்க காலம் முடிந்தது சொந்த...