×

21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கிடையாது கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க தானியங்கி மது விற்பனை மிஷின்: டாஸ்மாக் நிர்வாகம் தகவல்

சென்னை: மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் அமைக்கப்பட்டுள்தாகவும், 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யப்படாது எனவும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லரை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்பதாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களை தடுக்கும் வகையில் 4 மதுபான சில்லரை விற்பனைக் கடைகளில் மட்டும் கடைகளுக்கு உள்ளேயே தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் நிறுவப்பட உள்ளது.

இதன் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் போது அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படும். இந்த மிஷின் வணிக வளாக சில்லரை விற்பனை கடைகளுக்கு உள்ளேயே நிறுவப்பட்டுள்ளது. மேலும் தானியங்கி மிஷின் மூலம் செய்யப்படும் அனைத்து விற்பனைகளும் கடைப்பணியாளர்களாகிய மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் முன்னிலைல் நடைபெறும் வகையில் நிறுவப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மது வகைகள் விற்பனை செய்யப்பட மாட்டாது. கடைகளின் பணி நேரமான மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் மட்டுமே தானியங்கி மிஷினை பயன்படுத்த முடியும். மிஷின் குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கிடையாது கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க தானியங்கி மது விற்பனை மிஷின்: டாஸ்மாக் நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tasmac Administration ,Chennai ,Mishin ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...