×

சிறுவர்கள் செல்போனில் விளையாடுவதை தவிர்க்க வலியுறுத்தி குமரிக்கு மாற்றுத்திறனாளி இளைஞர் சைக்கிள் பயணம்: கனிமொழி எம்பி பாராட்டு

தூத்துக்குடி: சிறுவர்கள் செல்போனில் விளையாடுவதை தவிர்க்க வலியுறுத்தி சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள இளைஞருக்கு கனிமொழி எம்பி பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி (37). விபத்தில் ஒரு கையை இழந்த மாற்றுத் திறனாளியான இவர், சைக்கிளில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு உள்ளார். சிறுவர்கள் செல்போனில் விளையாடுவதை தவிர்த்து, உடலுக்கு ஆரோக்கியம் தரும் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 24ம் தேதி சென்னையில் இருந்து விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை தமீம் அன்சாரி தொடங்கினார்.

நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி வந்த இவரை கனிமொழி எம்பி, தூத்துக்குடியில் புத்தக திருவிழா நடைபெறும் இடத்திற்கு அழைத்து பாராட்டி அனுப்பி வைத்தார். இதில் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் தமீம் அன்சாரி கூறியதாவது: குழந்தைகள் உடற்பயிற்சியில் ஆர்வம் செலுத்த வேண்டும். செல்போன் விளையாட்டை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த சைக்கிள் பயணம் மேற்கொள்கிறேன். இதுவரை சுமார் 20 ஆயிரம் கிமீ தூரம் சைக்கிள் பயணம் செய்துள்ளேன், என்றார்.

The post சிறுவர்கள் செல்போனில் விளையாடுவதை தவிர்க்க வலியுறுத்தி குமரிக்கு மாற்றுத்திறனாளி இளைஞர் சைக்கிள் பயணம்: கனிமொழி எம்பி பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Kumari ,Thuthukudi ,Chennai ,Kanyakumari ,
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...