×

பேட்டை அருகே அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

பேட்டை: நெல்லை மாநகராட்சி 17வது வார்டுக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் 600க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப் பகுதி மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, சாலை வசதி, மின் விளக்கு வசதி உள்ளி்ட்டவற்றை செய்து தரக் கோரி இப் பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போது பெய்த மழை காரணமாக அப்பகுதி குடியிருப்பை சுற்றிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைக்குழந்தைகளுடன் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பழைய பேட்டை- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த டவுன் உதவி போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரன், பேட்டை இன்ஸ்பெக்டர்கள் ஷோபா ஜென்சி, அன்னலட்சுமி, நெல்ைல மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் வெங்கடகிருஷ்ணன், பைஜூ மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வார காலத்திற்குள் அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post பேட்டை அருகே அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Ambedgarh Nagar ,Naddy Corporation ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...