×

ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் முக்கிய நபர்களின் வங்கி கணக்குகளில் உள்ள ரூ.96 கோடி முடக்கம்: ஐ.ஜி ஆசியம்மாள் பேட்டி

சென்னை: ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் முக்கிய நபர்களின் வங்கி கணக்குகளில் உள்ள ரூ.96 கோடி முடக்கப்பட்டுள்ளதாக சென்னையில் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். வேலூரை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இவர்களுக்கு கிளை இருந்தது. ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் தருவோம். 10 மாதம் இந்த பணத்தை தருவோம். உங்களுக்கு 3.6 லட்சம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்துள்ளனர். உறுதி அளித்தபடி ஆருத்ரா நிறுவனம் நடந்து கொள்ளாமல் மோசடியில் ஈடுபட்டதாக தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்படி, இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக இருந்த ஹரிஷ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பாஜக விளையாட்டு பிரிவில் முக்கிய பொறுப்பை பெறுவதற்காக அந்த கட்சி நிர்வாகிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக ஹரிஷ் வாக்குமூலம் அளித்துள்ளர். மேலும், ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக நடைபெறும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி கொண்டே உள்ளது.ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் இதுவரை ₹6 கோடி பணம், 4 கிலோ தங்க நகைகள், 130 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

மோசடி தொடர்பாக பாஜக நிர்வாகி ஹரிஷ், மைக்கேல் ராஜ் உட்பட இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் முடக்கப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட சொத்துக்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்த பின்னர், அடுத்த 6 மாதத்திற்குள் பொதுமக்கள் இழந்த பணம் திருப்பி கொடுக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் முக்கிய நபர்களின் வங்கி கணக்குகளில் உள்ள ரூ.96 கோடி முடக்கப்பட்டுள்ளதாக சென்னையில் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

அதில் அவர் பேசியதாவது, ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் ரூ.6.35 கோடி ரொக்கம், ரூ.1.13 கோடிக்கு தங்கம், வெள்ளி பொருட்கள், 22 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆருத்ரா நிறுவன மேலாண் இயக்குநர் ராஜசேகர், மனைவி உஷாவை கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளார். ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் உட்பட 4 பேர் மீது லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆருத்ரா,ஹிஜாவு, எல்பின், ஐ.எஃப்.எஸ் நிறுவனங்கள் மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை ஆருத்ரா உட்பட 4 நிறுவனங்களின் வழக்குகள் பற்றிய விவரங்கள் அமலாக்கத்துறையிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

The post ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் முக்கிய நபர்களின் வங்கி கணக்குகளில் உள்ள ரூ.96 கோடி முடக்கம்: ஐ.ஜி ஆசியம்மாள் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Arudra ,IG ,Asiyammal ,Chennai ,
× RELATED நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார்...