இந்தூர்: ராகுல்காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவரை கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு பின்னர் இந்தூர் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பாரத் ஜோடோ யாத்திரை சென்ற போது மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகர இனிப்பு கடையில் போலீசாருக்கு மர்ம கடிதம் ஒன்று கிடைத்தது. அந்த கடிதத்தில், ராகுல்காந்தி மத்தியப் பிரதேசத்திற்குள் நுழையும் முன் அவர் கொல்லப்படுவார் என்று எழுதப்பட்டிருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில் ராகுல் காந்திக்கு கொலைமிரட்டல் விடுத்த தயாசிங் (60) என்ற முதியவரை கிட்டதட்ட 5 மாதங்களுக்கு பின்னர், ஐஷிலால் ஜாம் ரயிலில் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி அகர்வால் கூறுகையில், ‘ராகுல்காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த தயாசிங்கை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளோம். கைது செய்யப்பட்ட தயாசிங், ராகுல் காந்திக்கு ஏன் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பினார் என்பது தெரியவில்லை. ெதாடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.
The post ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவர் கைது: 5 மாதங்களுக்கு பின் நடவடிக்கை appeared first on Dinakaran.
