×

அரியானாவில் குடும்ப பிரச்னையால் மனைவியின் கழுத்தை அறுத்து வீசியெறிந்த கணவன்: தீயில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு

மானேசர்: அரியானாவில் குடும்ப பிரச்னையால் மனைவியின் கழுத்தை அறுத்து வீசியறிந்த கணவன், உடலை தீ வைத்து எரிந்தார். இச்சம்பவம் தொடர்பாக அவரை போலீசார் கைது செய்தனர். அரியானா மாநிலம் மானேசரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண்ணின் தலைப்பகுதி இல்லை. கைகள் வெட்டப்பட்ட நிலையில் இருந்தது. இச்சம்பவம் குறித்து குர்கிராம் போலீஸ் கமிஷனர் கலா ராமச்சந்திரன் கூறுகையில், ‘மானேசர் அடுத்த காந்தி நகரில் ஜிதேந்தர் என்பவர் தனது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இவர் குக்டோலா கிராமத்தை சேர்ந்த உமேத் சிங் என்பவரின் பண்ணை நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். அந்த பண்ணை வீட்டின் உரிமையாளர் உமேத் சிங் அளித்த தகவலின் பேரில், வாடகைக்கு விடப்பட்ட வீட்டின் ஓர் அறையில் புகை வந்து கொண்டிருப்பதாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். அங்கு சென்று பார்த்த போது எரிந்த நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உமேத் சிங் அளித்த புகாரின் அடிப்படையில், மானேசர் ேபாலீசார் ஐபிசியின் 302 மற்றும் 201 ஆகியவற்றின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் 30 வயதுடைய அந்தப் பெண்ணை கொன்றது அவரது கணவர் ஜிதேந்தர் என்பது தெரியவந்தது. அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பெண்ணின் தலையை கெர்கி தவுலா பகுதியில் மீட்டோம். குடும்ப பிரச்னையின் காரணமாக தனது மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்று, உடலை தீவைத்து எரித்துள்ளார். கைது செய்யப்பட்ட அவரிடம், குடும்ப பிரச்னையா? வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

The post அரியானாவில் குடும்ப பிரச்னையால் மனைவியின் கழுத்தை அறுத்து வீசியெறிந்த கணவன்: தீயில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Ariana ,Manesar ,Haryana ,Dinakaran ,
× RELATED அரியானாவில் காங்கிரஸ் அலை: பிரியங்கா பேச்சு