×

ஜோலார்பேட்டை அருகே மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்-9 பேர் காயம்

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே மாடு விடும் விழாவில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடியது.ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி வெள்ளைய கவுண்டனூர் கிராமத்தில் மாடு விடும் திருவிழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஊர் கவுண்டர் கே. ரவி, தர்மகர்த்தா கே. சிவபெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊராட்சி மன்ற தலைவர் எம். மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் கே.ஜி. சரவணன், கே. சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏ க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாடு விடும் திருவிழாவை கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும், இவ்விழாவில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. போட்டியில் பங்கேற்ற காளைகளை கால்நடை நிபுணர்களின் பரிசோதனைக்கு பிறகே போட்டியில் பங்கேற்க அனுமதியளித்தனர். தொடர்ந்து, விழாவில் திருப்பத்தூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, ஜோலார்பேட்டை, ஆலங்காயம், மிட்டூர், நாட்றம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் பங்கேற்றன.

குறைந்த நேரத்தில் சீறிப்பாய்ந்து இலக்கையடைந்த காளைகளுக்கு முதல் பரிசாக ₹60 ஆயிரமும், 2 வது பரிசாக ₹45 ஆயிரமும், 3 வது பரிசாக ₹35 ஆயிரம் உள்ளிட்ட மொத்தம் 45 பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த விழாவினை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரண்டு கண்டு ரசித்தனர்.

மேலும், மந்தையில் ஓடி சீறிப்பாய்ந்த காளைகள் மீது கைபோட முயன்ற 8 பேருக்கு சிறு காயமும், ஒருவர் படுகாயமும் அடைந்தார். அதனை தொடர்ந்து காயம் அடைந்தவர்களுக்கு அங்கு இருந்த மருத்துவ குழுவினர் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விழாவில் அசம்பாவிதங்களை தவிர்க்க காவல்துறையினர், வருவாய்த்துறையினர், தீயணைப்பு துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post ஜோலார்பேட்டை அருகே மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்-9 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : -catching ,Zolarbet ,Zolarbett ,Zolarbate ,Jolarbet ,Bulls ,Zolarbat ,Dinakaran ,
× RELATED வாணியக்குடியில் மீன் பிடித்துறைமுகம் ஒன்றிய குழுவினர் ஆய்வு