×

எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 3055 நர்சிங் ஆபீசர்கள்

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் நர்சிங் ஆபீசர்களை தேர்வு செய்ய பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி: நர்சிங் ஆபீசர்கள்
மொத்த இடங்கள்: 3055 (பொது- 1304, ஒபிசி-808, எஸ்சி-447, எஸ்டி-198, பொருளாதார பிற்பட்டோர்-298). இவற்றில் 8 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

தகுதி: நர்சிங் பாடத்தில் பிஎஸ்சி (ஹானர்ஸ்)/பிஎஸ்சி அல்லது நர்சிங் முதுநிலை சான்றிதழ் படிப்பு/ போஸ்ட் பேசிக் நர்சிங் மற்றும் நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஜெனரல் நர்சிங் மிட்வொய்பரியில் டிப்ளமோ படித்து நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும் மற்றும் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமைனயில் 2 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் இருக்க வேண்டும்.

வயது: 05.05.23 அன்று 18 முதல் 30க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கட்டணம்: பொது மற்றும் ஒபிசி யினருக்கு ரூ.3000, எஸ்சி/எஸ்டியினருக்கு ரூ.2400/-.
நர்சிங் ஆபீசர்களுக்்கான எழுத்துத்தேர்வு ஜூன் 3ம் தேதி நடைபெறும்.

விண்ணப்பதாரர்கள் www.aiimsexams.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.05.2023.

 

The post எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 3055 நர்சிங் ஆபீசர்கள் appeared first on Dinakaran.

Tags : AIIMS Hospitals ,AIIMS ,Union Government ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...