×

சி.வி.சண்முகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க மறுத்த தமிழ்நாடு அரசின் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்..!!

சென்னை: சி.வி.சண்முகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க மறுத்த தமிழ்நாடு அரசின் உத்தரவை ஐகோர்ட் ரத்து செய்தது. பாதுகாப்பு கோரிய சி.வி.சண்முகம் மனுவை 8 வாரத்துக்குள் பரிசீலித்து முடிவெடுக்க தமிழ்நாடு டிஜிபிக்கு ஆணையிட்டுள்ளது. 2006 முதல் வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு 2021ம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. பாதுகாப்பை திரும்பப் பெற்றதில் உள்நோக்கம் எதுவுமில்லை; அச்சுறுத்தல் எதுவும் இல்லாததால் வாபஸ் பெறப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

The post சி.வி.சண்முகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க மறுத்த தமிழ்நாடு அரசின் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.

Tags : ICourt ,Tamil Nadu government ,CV Shanmugha ,CHENNAI ,High Court ,Shanmughat ,CV ,Shanmugam ,CV Shanmugam ,
× RELATED ஏழை, எளிய மக்களின் மேம்பாட்டுக்காக...