×

கரியசோலை பகுதியில் கிணறு தூர்வாரியபோது விலங்கு எலும்புகள் கண்டெடுப்பு? பொதுமக்கள் அச்சம்

பந்தலூர் : பந்தலூர் அருகே தேவாலா கரியசோலை பகுதியில் கிணறு தூர்வாரும்போது எலும்புகள் கண்டறியப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.பந்தலூர் வனசரகம் கரியன்சோலை கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுக்கிணறு தூர்வாரும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது கிணற்றில் எலும்புகள் இருப்பது கண்டறியபட்டது. இது தொடர்பாக போலீசார், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நெலாக்கோட்டை இன்ஸ்பெக்டர் திருஞனசம்பந்தம், பந்தலூர் வனச்சரகர் சஞ்ஜீவி, ஊட்டி தடய அறிவியல் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதனை தொடர்ந்து ஆய்வு செய்தபோது அவை மனித எலும்புகள் அல்ல என்பதை தடய அறிவியல் மற்றும் கால்நடை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதன்பின்னர் கைப்பற்றப்பட்ட எலும்புகளை வன விலங்குகளின் எலும்புங்களா? என்பதை உறுதி செய்ய சென்னை உயர் நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிணறு தூர்வாரும் போது எலும்புகள் கண்டறியப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். சம்பவம் குறித்து வனத்துறை மற்றும் காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

The post கரியசோலை பகுதியில் கிணறு தூர்வாரியபோது விலங்கு எலும்புகள் கண்டெடுப்பு? பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Cariazole ,Bandalur ,Devala Kariasol ,Vanasaragam Karianzol ,Gariasol ,Dinakaran ,
× RELATED அத்திக்குன்னா பகுதியில் பூமியில்...