×

ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க தனிப்படை: திருப்பூரில் 10 கிலோ கஞ்சா பரிமுதல்!

திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையத்தில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சி.சைலேந்திரபாபு, காவல்துறை தலைமை இயக்குனர் படைத்தலைவர், தமிழ்நாடு அவர்களின் உத்தரவின் பேரில் வி.வனிதா, காவல்துறை கூடுதல் இயக்குனர், இருப்புப்பாதை, தமிழ்நாடு அவர்களின் மேற்பார்வையில் வி.பொன்ராமு, காவல் கண்காணிப்பாளர், இருப்புப்பாதை, சென்னை அவர்களின் கண்காணிப்பில் காவல் துணை கண்காணிப்பாளர்கள், சென்னை சென்ட்ரல், எழும்பூர், சேலம் மற்றும் கோயமுத்துார் ஆகியோரின் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு அனைத்து ரயில் நிலையங்களிலும் கஞ்சா கடத்தலை தடுக்கவும், கஞ்சா கடத்துபவர்களை கைது செய்யவும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று (28.04.2023) அதிகாலை சுமார் 03.30 மணியளவில் திருப்பூர் ரயில் நிலைய நடைமேடைகளில் கோயமுத்துார் உட்கோட்ட தனிப்படையினர் பாபு, உதவி ஆய்வாளர் தலைமையில் ரோந்து அலுவலில் ஈடுபட்டிருந்தபோது திருப்பூர் ரயில் நிலைய நடைமேடை எண். 1 ல் வந்த வண்டி எண். 18567 விசாகபட்டினம்-கொல்லம் விரைவு வண்டியில் இருந்து இறங்கி நடைமேடையில் சென்றுக்கொண்டிருந்த சுமந்த்குமார் சர்ச்சி குர்ஷனா சர்ச்சி, அவருடைய மனைவி சுபத்ராதாஸ் சுமந்த்குமார் சர்ச்சி ஓடிசா மாநிலம் ஆகியோரை சந்தேகத்தின் பெயரில் அவர் வைத்திருந்த சூட்கேசை திறக்கச்சொல்லி சோதனை செய்தபோது அதில் ஐந்து பொட்டலங்கள் மொத்தம் 10 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட 10 கிலோ கஞ்சா மற்றும் எதிரிகளை காவல் நிலையம் அழைத்து வந்து மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறப்பாக செயல்பட்டு கஞ்சா கடத்தியவர்களையும், கஞ்சாவையும் கைப்பற்றிய தனிப்படையினரை வி.பொன்ராமு, காவல் கண்காணிப்பாளர், இருப்புப்பாதை, சென்னை அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்கள். மேலும் வட மாநிலங்களில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா மற்றும் ரேணிகுண்டா மார்கமாக தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து விரைவு ரயில்களிலும் கஞ்சா, குட்கா, புகையிலை, மதுபாட்டில்கள் மற்றும் இதர தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுகிறதா என தனிப்படையினர் மூலமும் மற்றும் போதைப்பொருட்களை கண்டறியும் மோப்ப நாய்படை மூலமும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

The post ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க தனிப்படை: திருப்பூரில் 10 கிலோ கஞ்சா பரிமுதல்! appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,RC ,Sailendra Babu ,Creator ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் இருந்து தேர்தலில்...