×

அரசின் நலத்திட்டங்களை பெற கிரைன்ஸ் இணையதளத்தில் பதியலாம்-விவசாயிகளுக்கு, கலெக்டர் அழைப்பு

திருவாருர் : திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அரசின் நலத்திட்டங்களை அறிந்து கொண்டு அதனை பெற்றுக்கொள்ள வசதியாக கிரைன்ஸ் இணையதளத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்துகொள்ளுமாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.திருவாருர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

இதில் விவாசயிகள் பலரும் பல்வேறு கேரிகைகள் குறித்த பேசினர். கூட்டத்தில் கலெக்டர் சாருஸ்ரீ பேசியதாவது, 2022 & -23ம் ஆண்டு குறுவைபருவத்தில் 60 ஆயிரம் ஹெக்டேரிலும், சம்பா மற்றும் தாளடி பருவத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம், கோடை சாகுபடியளாக 9 ஆயிரத்து 500 ஹெக்டேரிலும் என மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதில் குறுவை பருவத்தில் 14 ஆயிரத்து 204 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும், 38 ஆயிரத்து 63 ஹெக்டேரில் செம்மை நெல் சாகுபடி முறையிலும், 9 ஆயிரத்து 321 ஹெக்டேரில் சாதாரண நெல் நடவு முறையிலும் ஆக மொத்தம் 61 ஆயிரத்து 588 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டது.

மேலும் சம்பா பருவத்தில் 40 ஆயிரத்து 737 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும், 38 ஆயிரத்து 552 ஹெக்டேரில் செம்மை நெல் சாகுபடி முறையிலும், 7 ஆயிரத்து 654 ஹெக்டேரில் சாதாரண நெல் நடவு முறையிலும் என மொத்தம் 86 ஆயிரத்து 943 ஹெக்டேரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தாளடி பருவத்தில் 9 ஆயிரத்து 637 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும், 38 ஆயிரத்து 115 ஹெக்டேரில் செம்மை நெல் சாகுபடி முறையிலும், 13 ஆயிரத்து 634 ஹெக்டேரில் சாதாரண நெல் நடவு முறையிலும் என மொத்தம் 61 ஆயிரத்து 376 ஹெக்டேரில் தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 2022&23ம் ஆண்டில் உளுந்து 51 ஆயிரத்து 600 ஹெக்டேரிலும், பச்சைப்பயறு 39 ஆயிரத்து 300 ஹெக்டேரிலும் என மொத்தம் 90 ஆயிரத்து 900 ஹெக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 20 ஆயிரத்து 581 ஹெக்டேரில் உளுந்து சாகுபடியும், 66 ஆயிரத்து 445 ஹெக்டேரில் பச்சை பயறு சாகுபடியும் நடைபெற்றுள்ளது. நிலக்கடலை 3 ஆயிரம் ஹெக்டேரிலும், எள் 2 ஆயிரம் ஹெக்டேரிலும், சூரியகாந்தி 30 ஹெக்டேரிலும் மற்றும் ஆமணக்கு 20 ஹெக்டேரிலும் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதில் 2 ஆயிரத்து 724 ஹெக்டேரில் நிலக்கடலை சாகுபடியும், 4 ஆயிரத்து 948 ஹெக்டேரில் எள் சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது. பருத்தி 12 ஆயிரத்து 700 ஹெக்டேரிலும், கரும்பு 110 ஹெக்டேரிலும் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதில் ராபிபருவத்தில் 9 ஆயிரத்து 84 ஹெக்டேரில் பருத்தி, 109 ஹெக்டேரில் கரும்புசாகுபடியும் செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அரசின் நலத்திட்டங்களை அறிந்து கொண்டு அதனை பெற்றுக்கொள்ள வசதியாக கிரைன்ஸ் இணையதளத்தில், விவசாயிகள் தங்கள் விபரங்களை பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

தமிழ்நாடுஅரசின் பல்வேறுதுறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண்மை அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக கிரைன்ஸ் என்ற இணையதளம் மூலமாக அரசின் நன்மைகள் முறையாக பயனாளிக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் விவசாயிகளின் விபரங்களை ஒற்றைசாளர முறையில் பதிவுசெய்து, அரசின் பலதுறைகளின் பல்வேறு திட்ட பலன்களை பெற்றிடவும், வரும் காலங்களில் அரசின் திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கும் போது, தனித்தனியாக ஆவணங்களை சமர்பிக்க தேவையில்லாமல் எளிதில் விவசாயிகளுக்கு பயன்கள் கிடைக்கும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்திடவிவசாயிகளின் ஆதார் எண், புகைப்படம், வங்கிகணக்குவிபரம் மற்றும் நிலஉரிமைஆவணங்களுடன் தங்களது கிராம நிர்வாக அலுவலகம்,வட்டாரவேளாண்மைமற்றும் தோட்டக்கலைத் துறைஅலுவலகத்தை அணுகிகிரைன்ஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் டி.ஆர்.ஒ சிதம்பரம், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், வேளாண்மை இணை இயக்குநர் ஆசீர் கனகராஜன், வேளாண்மைதுணை இயக்குநர் ரவீந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஏழுமலை மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post அரசின் நலத்திட்டங்களை பெற கிரைன்ஸ் இணையதளத்தில் பதியலாம்-விவசாயிகளுக்கு, கலெக்டர் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Grain ,Thiruvarur ,Grains ,Dinakaran ,
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்