×

முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் மசினி என்ற யானை தாக்கி உயிரிழந்த பாகன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

கோவை: முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் மசினி என்ற யானை தாக்கி உயிரிழந்த யானை பாகன் பாலன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார். பாகன் பாலனின் மகனுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வளர்ப்பு யானைக்கு உணவு அளித்துவிட்டு அழைத்துச் சென்றபோது திடீரென தாக்கியதில் படுகாயம் அடைந்த பாகன் பாலன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

The post முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் மசினி என்ற யானை தாக்கி உயிரிழந்த பாகன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Masini ,Mudumalai Elephant Camp ,Coimbatore ,
× RELATED கோவை வனத்துறை அதிகாரிகள் அலட்சியம்:...