×

கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கலாம்பாடி கிராமத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

கீழ்பென்னாத்தூர் : கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கலாம்பாடி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கால்நடை மருத்துவ வசதி கிடைக்கபெறாத கிராமங்கள் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உள்ள கால்நடைகளின் நலன் பாதுகாக்கும் பொருட்டு சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்த ஆணை பிறப்பித்துள்ளார்.

அதன்படி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்பு துறை சார்பில், கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம், கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கலாம்பாடி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு, ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் மற்றும் துணை தலைவர் பஞ்சவர்ணம் திருமலை ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், தடுப்பூசி, சிகிச்சை, குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல் என 250 கால்நடைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில், கால்நடை மருத்துவர் ஆனந்தன், உதவியாளர் சுப்பிரமணி மற்றும் செயற்கை முறை கருவூட்டாளர் சிங்காரவேல் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சையும் கால்நடை வளர்ப்பு பற்றிய ஆலோசனைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாமில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கலாம்பாடி கிராமத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Medical ,Karakkalambadi village ,Uthpennathur ,Udpennathur ,Renaissance ,Daibennathur ,Bennathur ,Karickalambadi Village Special Medical Camp for Livestock ,Dinakaran ,
× RELATED உத்தரவாதம் தந்து மருத்துவ...