×

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்-180 பேர் பங்கேற்றனர்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. அதில், 180 பேர் கலந்துகொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை(யுடிஐடி) ஆகியவை வழங்குவதற்கு வசதியாக, வாரந்ேதாறும் வியாழக்கிழமையன்று சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. அதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் சிறப்பு மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாற்றுத்திறனாளிகளின் பாதிப்புகளை மருத்துவக் குழுவினர் பரிசோதித்து, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

இந்த முகாமில், சுமார் 180 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு, மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து, மாற்றுத்திறன் பாதிப்பு சதவீதம் குறித்து சான்று அளித்தனர். அதன் அடிப்படையில், தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.இதுகுறித்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி கூறுகையில், ‘திருவண்ணாமலை மாவட்டத்தில் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்கு, தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் வாரந்தோறும் நடத்துகிறோம்.

அதன்படி, இந்த முகாமில் 180 பேர் கலந்துகொண்டனர்.ஆரணி மற்றும் செய்யாறு ஆகிய வருவாய் கோட்டங்களில் விரைவில் சிறப்பு முகாம் நடத்தப்படும். அதற்கான தேதி, இடம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும். அதுவரை, வாராந்திர சிறப்பு முகாம் திருவண்ணாமலையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறும் என்றார்.

The post திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்-180 பேர் பங்கேற்றனர் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalaya ,National ,Identity Issuing Camp ,Tiruvannamalai ,Thiruvannamalai ,National Identity ,Issuing Camp ,
× RELATED தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவு...