×

கொளத்தூரில் பிபிஜி சங்கர் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக 9 தனிப்படைகள் அமைத்து விசாரணை

கொளத்தூர்: கொளத்தூரில் பாஜக பிரமுகர் சங்கர் கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வளர்புரத்தை சேர்ந்த பிபிஜி சங்கர் என்பவர் பாஜகவில் எஸ்.சி, எஸ்.டி பிரிவில் மாநில பொருளாளராக பதவிவகித்துள்ளார். அதே போன்று வளர்புர ஊராட்சி மன்ற தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கொளத்தூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்று விட்டு மீண்டும் வளர்புரம் நோக்கி செல்லும் போது பூந்தமல்லி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை நஸ்ரத் பேட்டை சந்திப்பில் சிக்கனலில் கார் நின்றபோது இவரது காரை பின் தொடர்ந்து வந்த இரண்டு காரில் வந்த மர்மநபர்கள் திடீரென சரமாரியாக 3 நாட்டுவெடிகுண்டுகளை காரின் மீது வீசினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பிபிஜி சங்கர் உடனடியாக காரைவிட்டு இறங்கி சாலையின் மறுபுறமாக தப்பி சென்றார். விடாமல் அவரை துரத்தி சென்ற மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். குறிப்பாக முயற்சி செய்தபோது பிபிஜி சங்கரும் எதிர் தாக்குதல் செய்ய கத்தியை வீசியுள்ளார். ஆனாலும் அவர் தப்பிக்க நினைத்திருந்தால் தப்பித்திருக்கலாம் எதிர்த்து தாக்குதல் செய்ய முயற்சி செய்ததில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அந்த நிலையிலும் அவர்கள் 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். 5 நாட்டு வெடிகுண்டுகள் நேற்று ஒரே சமயத்தில் வீசியுள்ளார் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் அறிந்த ஆவடி காவல் ஆணையராக இணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சுமார் 9 தனிப்படைகள் அமைத்து தற்போது வரை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக நேற்று சங்கர் அவர்களுக்கு வந்த செல்போன் அழைப்புகள், சம்பவ நடைபெற்ற இடத்திலிருந்த செல்போன் அழைப்புகள் போன்ற பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தடயவியல் நிபுணர்கள் தடையங்களை சேகரித்து சம்பவம் குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மறுபுறம் பிபிஜி சங்கரின் உடலை உடற்கூராய்வு செய்ய நகர்ப்புற காவல் ஆய்வாளர் தமிழ்செல்வி அவர்களின் தலைமையிலும் குழு சென்றுள்ளது. இவருக்கு எதிராக உள்ள அணைத்து தரப்பினரையும் தனி தனியாக வெவ்வேறு இடங்களில் வைத்து தற்போது தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் தற்போது 9 தனிப்படைகள் தீவிரமாக கொலையாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post கொளத்தூரில் பிபிஜி சங்கர் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக 9 தனிப்படைகள் அமைத்து விசாரணை appeared first on Dinakaran.

Tags : forces ,PPG ,Shankar ,Kolathur ,BJP ,BPG ,Varapuram ,Dinakaran ,
× RELATED பலே திருடன் பதுக்கிய ₹8 லட்சம் மதிப்பு...