×

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த வாரம் வரை கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. கிட்டத்தட்ட 10 முதல் 14 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி கடந்து பதிவாகியுள்ளது. இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் இன்றும் நாளையும் 28, 29 இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் நாளை மறுநாள் (30.04.2023) நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும், 1ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருப்பத்தூர், திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சி நிலவுகிறது. இந்த நிலையில், 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological ,Chennai ,Meteorological Center ,
× RELATED 5 நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர்...