×

நாட்டிலேயே முதன்முதலாக ஹைட்ரோ எரிசக்தி மூலம் இயங்கும் படகை வடிவமைத்து கோவை மாணவர்கள் அசத்தல்!!

கோவை : நாட்டிலேயே முதன்முதலாக ஹைட்ரோ எரிசக்தி மூலமாக இயங்கும் படகை வடிவமைத்து கோவை மாணவர்கள் அசத்தி உள்ளனர். சரவணம்ப்பட்டி அருகே குமரகுரு தனியார் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் 10 மாணவர்கள் முதலில் பேட்டரி மற்றும் சோலார் பேனல்கள் ஆகியவற்றை சக்தி ஆதாரங்களாக கொண்டு யாளி என்ற இந்தியாவின் முதல் ஆற்றல் படகை உருவாக்கினர். தொடர்ந்து 2வது ஆண்டாக சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்ற டிஎஸ்எஸ் அணி தற்போது ஹைட்ரோ எரிசக்தி மூலமாக இயங்கும் படகை வடிவமைத்துள்ளனர்.

வருகிற ஜூலை மாதம் நடைபெறும் தொழில்நுட்ப நிகழ்ச்சியில் இந்த குழுவினரின் படகு இடம் பெற உள்ளது ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் பயன்படுத்தப்படுகின்ற தொழில்நுட்பத்தினை கொண்டு உருவாக்கி உள்ள .இந்த படகிற்கு 5 யூனிட் மின்சாராமே போதுமானது என்று தொழில்நுட்ப மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.ஹைட்ரோ எரிசக்தி பயன்பாட்டினால் இந்த படகு சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை விட 40 மடங்கு எரிபொருள் செலவு இந்த படகிற்கு குறைவு என்றும் கூறப்படுகிறது.

The post நாட்டிலேயே முதன்முதலாக ஹைட்ரோ எரிசக்தி மூலம் இயங்கும் படகை வடிவமைத்து கோவை மாணவர்கள் அசத்தல்!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Saravanampatti… ,Dinakaran ,
× RELATED குழந்தைகளை விட்டு வேலைக்காக மனைவி லண்டன் சென்றதால் போலீஸ் ஏட்டு தற்கொலை