×

திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் பரவியுள்ள விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை

 

திருவாரூர்: திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் பரவியுள்ள ஆகாய தாமரையினை அகற்ற வேண்டும் என விவசாயிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் அருகே எண்கன் என்ற இடத்தில் வெட்டாற்றிலிருந்து ஓடம்போக்கி ஆறானது பிரிந்து அம்மையப்பன், திருவாரூர், கிடாரங்கொண்டான், ஆண்டிபாளையம் ஆகிய ஊர்கள் வழியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு செல்கிறது. இந்நிலையில் இந்த ஆறானது பாசன ஆறு மட்டுமின்றி மழை காலங்களில் வடிகாலாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த ஆற்றில் தற்போது ஆகாய தாமரையானது அதிகளவில் பரவியுள்ளதன் காரணமாக ஆற்றில் நீர் வரும் நேரங்களில் சரிவர நீர் செல்ல முடியாமல் தடைபடுவதுடன் மழை காலங்களிலும் அதிக பாதிப்புகள் ஏற்ப்பட்டு வருகின்றன. கடந்த 2021ம் ஆண்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கடந்த 2 வருடங்களாக இந்த ஆற்றில் குறிப்பிட்ட அளவு நீளத்திற்கு துர்வாரும் பணிகள் நடைபெற்றுள்ளன. இருப்பினும் இந்த ஆறு முழுவதும் உள்ள ஆகாய தாமரையினை தற்போதைய கோடை காலத்திலேயே அகற்றிட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கும், பொது பணி துறையினருக்கும் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் பரவியுள்ள விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruvarur Odamboki river ,Tiruvarur ,Dinakaran ,
× RELATED ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்குள்...