×

தா.பழூர் அருகே இடங்கண்ணி திரவுபதி அம்மன் கோயிலில் காப்புகட்டு நிகழ்ச்சி

 

தா.பழூர்: அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவுக்காக காப்பு கட்டி ஒரு வாரம் கடும் விரதம் இருந்து பக்தர்கள் தீக்குழியில் இறங்கி தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு சித்திரை மாதம் தீமிதி திருவிழாவை நடத்த ஊர் பொதுமக்கள் தீர்மானித்து காப்பு கட்டுதலுக்கான ஏற்பாடுகளை செய்தனர். இதனை தொடர்ந்து கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் யாகம் நடைபெற்றது.

இதில் ஸ்ரீ திரொளபதி அம்மன், மாரியம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தணம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. வரும் சித்திரை 22ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. மிதி திருவிழாவிற்கு கிராம பொதுமக்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post தா.பழூர் அருகே இடங்கண்ணி திரவுபதி அம்மன் கோயிலில் காப்புகட்டு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Itankanni ,Draupathi ,Amman ,Temple ,Tha.Phaur. ,Tha.Pazhur ,Tirupati Amman temple ,Ariyalur district ,
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்