×

60 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்த நாய் உயிருடன் மீட்பு

 

பாடாலூர்: பாடாலூர் அருகே நாட்டார்மங்கலத்தில் கிணற்றுக்குள் விழுந்த நாய் உயிருடன் நேற்று மீட்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் மருதடி செல்லும் சாலையில் செல்லியம்மன் கோயில் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் 60 அடி ஆழ கிணற்றில் நாய் ஒன்று நேற்று முன்தினம் தவறி விழுந்தது. 30 அடி ஆழம் வரை கிணற்றில் தண்ணீர் இருந்தது.

நீரில் தத்தளித்தபடி நாய் சத்தம் போட்டது. இதை, அங்கிருந்தவர்கள் பார்த்து பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அதிகாரி (போக்குவரத்து) முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி நாயை உயிருடன் மீட்டனர். இதையடுத்து பொதுமக்கள், தீயணைப்பு வீரர்களை வெகுவாக பாராட்டினர்.

The post 60 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்த நாய் உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Padalur ,Natarmangalam ,Aladhur taluka ,Perambalur district ,Dinakaran ,
× RELATED செட்டிகுளத்தில் தூக்கு தேரில் மாரியம்மன் வீதி உலா