தா.பழூர்: விக்கிரமங்கலம் அருகே கதண்டு கடித்து விவசாய தொழிலாளர்கள் 10 பேர் காயம் அடைந்தனர். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள நாகமங்கலம் அரசுகாரன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள் (62). இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் முருங்கை பயிரிட்டுள்ளார். இதற்கு களை எடுப்பதற்காக நேற்று மாலை தனது விவசாய நிலத்தில் பட்டகட்டாங்குறிச்சியை சேர்ந்த வளர்மதி (53), சின்னமணி (47), செந்தமிழ்செல்வி (28), சரிதா (24), பவளக்கொடி (43), வளர்மதி (31), அஞ்சலை (37), மாலதி (47), சந்திரா (50) ஆகிய 9 நபர்களும், மேலும் தோட்டத்துக்காரர் கலியபெருமாள் என மொத்தம் 10 நபர்கள் களை எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அருகே உள்ள ஆலமரத்தில் இருந்து கூட்டமாக வந்த கதண்டுகள் 10 நபர்களையும் கை, கால், முகம் போன்ற பகுதிகளில் சரமாரியாக கடித்தது. இதில் வலியால் துடித்தனர். இதையடுத்து அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகையில், கதண்டுகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
The post விக்கிரமங்கலம் அருகேதுரத்தி துரத்தி கடித்த கதண்டு தொழிலாளர்கள் 10 பேர் காயம் appeared first on Dinakaran.